பிரேமாவின் பெண் குழந்தை
பிரேமாவின் மூத்த ஆண் குழந்தைக்கு முன் பிறந்த இளைய பெண் குழந்தை அவள். வயலும் சேறும் இரண்டற கலந்த ஊர். முழுதாய் மூன்றாம் வகுப்பைத் தாண்டாதவள். அதற்காக அவரது அப்பா வெங்கட் அக்குழந்தைக்கு அடுப்படியைக் கொடுத்து அழகு பார்த்தார். கல்வியை கைவிட்டதால், தன்னம்பிக்கை - துணிச்சல் கை கூட வில்லை. பிரேமா அம்மா தவறி விட, பின் வந்த சிற்றன்னையின் கொடுமைகளை அனுபவித்ததாகவும் கேள்வி. திருமணம் ஆகி சோழம் வந்தடைந்தாள். ரயிலை கண்டது, அதில் பயணம் செய்தது எல்லாம் திருமணத்திற்கு பிறகு தான். மூன்று ஆண் குழந்தைகள், பிறந்து ஒரு வருடத்திற்குள் தவறிய பெண் குழந்தை. எப்போதும் கோபப்படாத சாந்தமான முகம். வெகுளி, வெள்ளந்தி. பாசத்தைக் கூட வெளிப்படுத்த தெரியாதவள். யாரும் சிரமப்படாமல் எளிதாக ஏய்த்து விடலாம். தேவைக்கேற்ப நன்றாக ஏத்தியும் விடலாம். தந்தை சொத்தை பிரித்துத் தர ம...