Posts

Showing posts from October, 2025

அவன் ஏன் கூலியானான்?

Image
தஞ்சை ஆட்டு மந்தை தெருவின் ஓரத்தில் இருந்தது அந்த ஓலைக் குடிசை. அப்பா கோவிந்தராஜ், அம்மா தனலட்சுமி மற்றும் அவர்கள் பெற்ற ஆறு குழந்தைகளின் உலகம் அது. முத்துப்போலப் பிறந்த ஆறு பிள்ளைகளில், சந்துருதான் கடைசி. அவனுக்கு நான்கு அண்ணன்களும், ஒரு அக்காவும் இருந்தனர். அப்பா வலுவிழக்க, குடும்ப வறுமையின் அனல் தணிக்க, தனலட்சுமி அம்மா விடியற்காலை 4 மணி முதலே தஞ்சை ராசா மிராசுதார் ஆஸ்பத்திரி வாசல் கடையில் இடியாப்பம் விற்று, குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். மூத்த பிள்ளைகள் எப்படியோ படித்து, அவரவர் வேலைகளில் அமர்ந்து, தங்கள் குடும்பங்களை  மட்டுமே கவனிக்க அவர்களுக்கு வருவாய் கிட்டியது. சிலருக்கு பொருள் இருந்தும் மனமில்லாது போனது. இளையவனான சந்துரு அந்த காலத்து பத்தாம் வகுப்பு அதாவது OLD SSLC வரை படித்திருந்தான். மேற்கொண்டு  நல்ல வேலைக்குக் காத்திருக்க அவனால் முடியவில்லை. முதுமையிலும் பெற்றோர் படும் கஷ்டம் அவன் தூக்கத்தை அசைத்துப் பார்த்தது. அலுவலக வேலைக்குப் போக, சட்டை சுத்தமாக இருக்க வேண்டும். டை கட்டி, காலணி அணிய வேண்டும். அதற்கெல்லாம் அவன் தயார் இல்லை. அதற்கான நேரம் ...