Posts

Showing posts from 2025

தீபம் பிளக்ஸ்

Image
  கோடை விடுமுறை     தஞ்சாவூர் கீழவாசல் குணங்குடிதாசனில் பால் சர்பத் விலையை  12 லிருந்து 15 ரூபாயாக உயர்த்தி இருந்தார்கள். கார்த்திகைச்செல்வன் அப்போது தான் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வெழுதி முடித்திருந்தான். ஒரு வாரம் கூட கடக்க வில்லை. அவனுக்கு அவ்வளவு போரடித்தது. கல்லூரி சேரும் வரை, தனக்கு எப்படியாவது ஒரு வேலை வாங்கி தரும்படி தன் அப்பாவிற்கு அழுத்தம் கொடுத்தான். பரீட்சை முடியும் வரை படிக்க வேண்டும் என்ற ஒரு வேலை இருந்தது. பரீட்சை முடிந்தவுடன் என்ன செய்வதென்று அவனுக்கு புரியவில்லை. பன்னிரண்டாம் வகுப்பு முடிந்த பின்பு தான் இந்த பிரச்சனை வரும். அதற்கு முன்பு வரை அடுத்த ஆண்டு இதுதான் படிக்கப் போகிறோம் என்ற ஒரு தெளிவு இருக்கும். கிடைக்கும் பழைய புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்திருக்கலாம். கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் பரிதாபங்கள்     அன்று மாலை அவனது அப்பா வீடு திரும்பும் போதே "நாளை என்னுடன் வா, உன்னை ஓரிடத்திற்கு அழைத்து செல்கிறேன். ஆபீஸ்ல வேலை. கம்ப்யூட்டரெல்லாம் இருக்கும்" என்றார். கம்ப்யூட்டரா? ஹையா தன் வாழ்க்கையில் விண்டோஸ் வழியாக தென்றல் வீசப் போகிறதே!! மாக...