ஒரு முறை, உணவு இடைவேளையின் போது விளையாடிக் கொண்டிருந்தேன். ஐந்தாம் வகுப்பு என்று நினைவு. அப்போது தமிழம்மா திருமதி. ஸ்டெல்லா அவர்கள் என்னை அழைத்து மேடை ஏற்றி விட்டார்கள்.
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்து கொண்டிருந்தது. மொத்தம் இரண்டு போட்டியாளர்கள் மட்டுமே இருந்தார்கள். ஒரு திருக்குறள் சொன்னாலே மூன்றாம் பரிசு நிச்சயம் என புளகாங்கிதம்(பேருவகை) அடைந்தேன்.
முதலில் வந்த மணி கண்ட பிரபு 55 திருக்குறட்களை சொன்னார். அடுத்து வந்த நண்பர் 18 குறட்களைச் சொல்லிச் சென்றார். நானோ எந்த வித ஒத்திகையும் இல்லாமல் தொடங்கினேன். அப்படி இப்படி 14 குறட்களைச் சொன்னேன். குறைவான குறட்களை சொல்லியும் உச்சரிப்பு மற்றும் நிறுத்தம் ஆகியவற்றிற்க்காக இரண்டாம் பரிசு பெற்றேன். சான்றிதழும் லஞ்ச் பாக்ஸும் கிடைத்தது.
"எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்பது அறிவு." (424)
விளக்கம்: கேட்பவருக்குப் புரியும்படி எளிமையாகத் தான் விளக்கிச் சொல்லியும், பிறரின் பேச்சுக்களில் உள்ள நுண்மையான பொருளைக் காண்பதும் அறிவு ஆகும்.
No comments:
Post a Comment