கந்தன் வேலைக்குச் சென்று கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பி இருந்தான். காளிக் கோயிலைத் தாண்டி தான் அவன் வீட்டை அடைந்தாக வேண்டும். கோயிலைக் கடக்க முற்பட்டப் போது அக்கோயிலில் எஞ்சி இருந்த சில பழைமை மாறாக் காட்சிகள் அவனுக்கு அவனது பால்யத்தைத் திரும்பி தந்தன. எட்டாவது வகுப்பு தொடங்கிக் கல்லூரி சேர்ந்த சிறிது நாள் வரை செவ்வாய், வெள்ளி, ஞாயிறு என அட்டவணைப் போட்டு வாரந்தவராது அந்த காளி கோயிலுக்கு சென்றவன் அவன். அவ்வளவு பக்தியா என அவசரப்பட்டு கந்தனுக்கு அதிக மதிப்பெண்களை அள்ளிப் போட்டு விட வேண்டாம். கடவுள் மறுப்பை, பெருமை என அவன் கர்வம் கொண்ட காலம் அது. பிறகு எதற்கு ? பூக்கார அம்மா பிரேமாவின் பூக்கடைக்கு தேவையான சாமான்களை, அவர் வீட்டிலிருந்து காளிக் கோயில் வரை, எடுத்துக் கொண்டுச் சேர்க்க, அவன் பெறும் ரூ.10 கூலிக்காக. பத்து என்பதெல்லாம் அப்போது அவனுக்கு மிகப் பெரிய எண். அதை வைத்து இரண்டு நாள் காலை இரவு சிற்றுண்டியை முடித்து...
பிரேமாவின் மூத்த ஆண் குழந்தைக்கு முன் பிறந்த இளைய பெண் குழந்தை அவள். வயலும் சேறும் இரண்டற கலந்த ஊர். முழுதாய் மூன்றாம் வகுப்பைத் தாண்டாதவள். அதற்காக அவரது அப்பா வெங்கட் அக்குழந்தைக்கு அடுப்படியைக் கொடுத்து அழகு பார்த்தார். கல்வியை கைவிட்டதால், தன்னம்பிக்கை - துணிச்சல் கை கூட வில்லை. பிரேமா அம்மா தவறி விட, பின் வந்த சிற்றன்னையின் கொடுமைகளை அனுபவித்ததாகவும் கேள்வி. திருமணம் ஆகி சோழம் வந்தடைந்தாள். ரயிலை கண்டது, அதில் பயணம் செய்தது எல்லாம் திருமணத்திற்கு பிறகு தான். மூன்று ஆண் குழந்தைகள், பிறந்து ஒரு வருடத்திற்குள் தவறிய பெண் குழந்தை. எப்போதும் கோபப்படாத சாந்தமான முகம். வெகுளி, வெள்ளந்தி. பாசத்தைக் கூட வெளிப்படுத்த தெரியாதவள். யாரும் சிரமப்படாமல் எளிதாக ஏய்த்து விடலாம். தேவைக்கேற்ப நன்றாக ஏத்தியும் விடலாம். தந்தை சொத்தை பிரித்துத் தர ம...
கோடை விடுமுறை தஞ்சாவூர் கீழவாசல் குணங்குடிதாசனில் பால் சர்பத் விலையை 12 லிருந்து 15 ரூபாயாக உயர்த்தி இருந்தார்கள். கார்த்திகைச்செல்வன் அப்போது தான் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வெழுதி முடித்திருந்தான். ஒரு வாரம் கூட கடக்க வில்லை. அவனுக்கு அவ்வளவு போரடித்தது. கல்லூரி சேரும் வரை, தனக்கு எப்படியாவது ஒரு வேலை வாங்கி தரும்படி தன் அப்பாவிற்கு அழுத்தம் கொடுத்தான். பரீட்சை முடியும் வரை படிக்க வேண்டும் என்ற ஒரு வேலை இருந்தது. பரீட்சை முடிந்தவுடன் என்ன செய்வதென்று அவனுக்கு புரியவில்லை. பன்னிரண்டாம் வகுப்பு முடிந்த பின்பு தான் இந்த பிரச்சனை வரும். அதற்கு முன்பு வரை அடுத்த ஆண்டு இதுதான் படிக்கப் போகிறோம் என்ற ஒரு தெளிவு இருக்கும். கிடைக்கும் பழைய புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்திருக்கலாம். கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் பரிதாபங்கள் அன்று மாலை அவனது அப்பா வீடு திரும்பும் போதே "நாளை என்னுடன் வா, உன்னை ஓரிடத்திற்கு அழைத்து செல்கிறேன். ஆபீஸ்ல வேலை. கம்ப்யூட்டரெல்லாம் இருக்கும்" என்றார். கம்ப்யூட்டரா? ஹையா தன் வாழ்க்கையில் விண்டோஸ் வழியாக தென்றல் வீசப் போகிறதே!! மாக...
Comments
Post a Comment